free website templates

வாய் முகூர்த்தம் எப்படி பலிக்கும்?

பலர் சிலரை இப்படி சொல்வது உண்டு

இவர் வாயில் ஏதாவது சொன்னால் அப்படியே பலிக்கும்

நல்ல வாய்ப்பா உனக்கு நீ சொன்னது அப்படியே பலிச்சிருச்சு

சரியான கருநான்கு காரன் என்றும்.

இந்த சிலரின் ஜாதகத்தில் லக்கணத்திற்கு 2ல் ராகு அல்லது கேது இருக்கும் இது வாக்கு ஸ்தானம்.

கேது மூலம் நல்ல சொல் பலிக்கும்(செம்பாம்பு)
ராகு மூலம் தீய சொல் பலிக்கும்(கரும்பாம்பு)
(பாம்புக்கு நாக்குத்தான் பிரதானம்)

ஏனென்றால் காலபுருஷ தத்துவத்தின் படி
மேஷம் முதல் வீடு, ரிஷபம் இரண்டாம் வீடு
இந்த 2ம் ஸ்தானம் வாக்கு ஸ்தானம்
இந்த வாக்கு ஸ்தானமான ரிஷபத்தில் கேது உச்சம்,ராகு நீச்சம்

சில ஜோதிட நூல்கள் கேது உச்சம் அடைவது
விருச்சிகம் என்றும் ராகு உச்சம் அடைவது
ரிஷபம் என்றும் சொல்கிறது,ஆனால் எனது அனுபவத்தில் கேது ரிஷபத்தில் உச்சம் அடைவதே செயல்படுகிறது.

கேது உள்ளுணர்வை குறிக்கும் கிரகம்,ஞான காரகன் கேது இந்த அமைப்பு ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் நபர்கள் சொன்ன சொல் பலிக்கும் இவர்களுக்கு ஜோதிடம் கற்றுயிருக்க தெரியவேண்டியத்தில்லை உள்ளுணர்வில் தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து இவர்கள் ஒரு சொல் சொன்னால் அது பலிக்கும்.

ஜோதிடம் பலிக்க கேதுவின் துணை மிகவும் முக்கியம்

பிராத்தனையை குறிக்கும் கிரகம் கேது
அதேபோல் எந்த மதமாகவும் இருந்தாலும்
மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்று
எல்லாம் வல்ல இறைவனிடம் பிரத்தனை வைத்து இவர்கள் நலம் பெற வேண்டும் என்று பிராத்தனை செய்தால் அதில் நலம் பெறுவார்கள்.

ஒரு விஷயம் வெளியுலகுக்கு வரவேண்டும் என்றால் இவர்கள் வாக்கின் மூலம் தன்னால் வெளியே வரும்.

முடிந்தவரை மற்றவர்கள் நலம் பெற வேண்டி
நல்ல சொற்களை சொல்லுங்கள்.



நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise