portfolio website templates

எனது ஜோதிட குருமார்களுக்கு அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

#உலகியல்_ஜோதிடம்

ஒரு ஜோதிட ஆய்வு மற்றும் விழிப்புணர்வு பதிவு.

கடந்த சில மாதங்களாக வலைதளங்களை ஃபேஸ்புக் யூட்யூப் போன்ற வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் விஷயம் வருகின்ற டிசம்பர் மாதம் 25,26,27 தேதிகளில் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக சேரப் போவதாகவும் அந்த கிரகங்கள் 300 வருடத்திற்கு ஒருமுறை தான் சேரும் என்றும் இந்த சேர்க்கையின் காரணமாக இயற்கை சீற்றங்கள் அதிகமாக உருவாகலாம் என்றும் அதிலும் குறிப்பாக சுனாமி நிலநடுக்கம் போன்ற பேராபத்துகள் இந்த பூமியில் ஏற்படுவதாகவும் பலரும் ஆராய்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அவை ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதேபோல் கடந்த 1962 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 4,5 தேதியில் மகர ராசியில் சுமார் எட்டு கிரகங்கள் ஒன்றாக சேர்ந்திருந்தன ராகு மட்டும் வெளியே இருக்கும் இந்த மூன்று நாட்களும் உலக அளவில் எந்தவித இயற்கை சீற்றங்களும் நடக்கவில்லை அது போன்ற ஒரு அசம்பாவிதங்களும் எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்,

ஒரே ராசியில் எல்லா கிரகங்களும் ஒன்றாக சேர்வதால் மட்டும் இயற்கை சீற்றங்கள் நடப்பதில்லை என்பது ஆராய்ச்சி உண்மை.

பொதுவாக நிலநடுக்கம் ஏற்பட சில முக்கிய கிரக சேர்க்கைகளை காரணமாகின்றன
அதில் மதிப்புக்குரிய
திரு. #நெல்லை_வசந்தன் ஐயா அவர்களது ஆய்வில் கண்டுபிடித்த "சூரியன் செவ்வாய் சனி" சேர்க்கை இருக்கும் காலகட்டங்களில் உலக அளவில் பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் பல ஆய்வுகளில் நானறிந்த விதத்தில் குரு சனி சேர்க்கையில் உலக அளவில் பல அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன
அதில் குறிப்பிடத்தக்கது

அமெரிக்கா டிரேட் சென்டர் விமான விபத்து

குஜராத் பூகம்பம்

ரஷ்ய புரட்சி (சுமார் நான்கு லட்சம் பேர் மரணம் அடைந்தார்கள்)

இந்த சேர்க்கையில் தான் என்பது பல ஜோதிட ஆய்வுகள் தெரிவிக்கின்றன

ஒரே ராசியில் பல கிரகங்கள் சேரும்பொழுது பாதிப்புகள் ஏற்படாது

ஆனால் குறிப்பிட்ட கிரக சேர்க்கைகள் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்

இந்த தனுசு ராசியில் சேரும் கிரகங்களால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு வாய்ப்பில்லை.

உங்களின் புரிதலுக்காக 1962 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதியும் கோச்சார கிரகநிலை படமாக கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919894582567 

Mobirise