free amp template

எனது ஜோதிட குருமார்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்.

வணக்கம்

எனது ஜோதிட குருமார்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்.

நேற்று எனது ஜோதிட நண்பர் ஒருவர் அலைபேசியில்
விஷ கன்னிகா தோஷத்தைப் பற்றி விளக்கம் கேட்டார் அதைப்பற்றி ஒரு பதிவும் பதிவு செய்யும்படி வினாவினார் அதற்காக இந்த பதிவு.

*விஷ கன்னிகா தோஷம்*

திரிதியை,சப்தமி,துவாதசி திதிகளும், கார்த்திகை,ஆயில்யம், சதயம் நட்சத்திரங்களும் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை,சனிக்கிழமை போன்ற கிழமைகளிலும் மேலே சொன்ன திதிகளும் நட்சத்திரங்கள் சேர்ந்து வந்தாலும்

லக்னம் பாவ கேந்திரமாகி லக்னத்தில் பாவ கிரகங்கள் இருந்தும் ஆறாம் பாவத்தில் இரண்டு பாவிகள் சேர்ந்து வந்தாலும் அந்த நேரத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு விஷ கன்னிகா தோஷம் பாதிக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது,

ஒன்பதாம் பாவத்தில் செவ்வாயும் லக்னத்தில் சனியும் ஐந்தாம் பாவத்தில் சூரியனும் நிற்பதும் விஷ கன்னிகா தோஷமாக கருதப்படுகிறது

இதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு பலவிதமான கஷ்டங்களும் வரலாம் என்றும் திருமணம் தடைபடுதல் அப்படி நடந்தாலும் குழந்தையின்மை புத்திர தோஷம் சன்னதி நாசம் போன்றவை ஏற்படலாம் என்றும் சில மூல நூல்கள் தெரிவிக்கின்றன

அதே போல் ஆண்களுக்கும் இது போன்ற தோஷங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது

லக்னத்திலிருந்து அல்லது சந்திரனில் இருந்தோ ஏழாம் பாவத்தில் அந்த பாவத்தின் அதிபன் நிற்பதும் அந்த பாவத்தின் மேல் அந்த பாபாதிபனின் பார்வை படுவதும் விஷ கன்னிகா தோஷம் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு பரிகாரமாக

சோமவார விரதம் (திங்கள் கிழமை) விரதம்.

உமாமகேஸ்வரி பூஜையும் இந்த தோஷத்திற்கு பரிகாரமாக கருதப்படுகிறது.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919894582567

Mobirise