simple site templates

சூரியன் பிறந்த நட்சத்திரம் எது?

சூரியன் பிறந்த நட்சத்திரம் எது?
******************* "ஹஸ்தம்" ******************
எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

யார் இந்த சூரியன்? சூரியனின் பிறப்பு குறித்து இரு வேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு தமது உந்திக் கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார். திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள் மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க ஓம் என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு.

அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை. மார்க்கண்டேய புராணத்தில் இந்த கதை சொல்லப்பட்டுள்ளது. சூரியன் பற்றிய

மற்றொரு வரலாறு வருமாறு:--
பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.

அந்த சூரியன் பிறந்த நட்சத்திரம் "ஹஸ்தம்"

அதேபோல் பூத கணங்களுக்கு எல்லாம் அதிபதியான "கணபதி"யின் நட்சத்திரமும் "ஹஸ்தம்" அவரும் ஓங்காரத்தின் ரூபாமே.
ஓங்காரத்தில் உள்ள "உ" என்ற எழுத்து பிள்ளையார் சுழி ஆகிற்று.

ஓங்காரம் – ஓம்
ஓம் என்னும் சொல் அ+உ+ம் என்ற முன்று எழுத்துக்களால் ஆனது.

பிரணவத்தின் வடிவம்
கணபதி திருவருவை வலது காது முதல் தொடங்கி தலையை சுற்றி வளைத்து இடது காது வரை கொண்டு வந்து தொங்கும் தும்பிக்கை வரை நீட்டிக்கொண்டு கழித்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் புலப்படும்.

சிவபெருமானிடத்திலிருந்து ஓம் எனும் நாதம் ஆதியில் பிறந்தது. ஓம் என்பதை பிரணவம் எனக் கூறுவர்.விநாயகர் பிரணவ வடிவனர். ஓம் பிரணவானன தேவாய நம என்பது அவரது மந்திரங்களில் ஒன்று. ஓம் எனும் பிரணவத்தின் வரி வடிவமே விநாயகர் வடிவம் அதன் ஒளி வடிவமே நாத விந்துவாகும். மேல்சுழி இருக்குமிடம் விநாயகரது ஒடிந்த கொம்பு இருக்குமிடம்.

அது அங்கிருந்து வலது கை வழியாக மேலேறிக் கிரீடத்தைச் சுற்றி இடக்கைப் பாசம்வரை வந்து வளைந்து நெற்றிப் பொட்டு வரையிலும் சென்று துதிக்கை வழியாகக் கீழ் இடக்கை வரை வந்து கால்வரை இறங்குகிறது. இடக்கையும் அதிலிருக்கும் மோதகமும் {ௐ} என்பதைக் குறிக்கிறது. ஆதலின் ஓம் எனும் வரி வடிவமே விநாயகரது வடிவமாகும்.

சமீபத்தில் சூரியனின் ஒலி(sound) "ௐ" என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மொத்தத்தில் "சூரியன்" "விநாயகர்" ஹஸ்தா நட்சத்திரத்தின் மூலமாக ஒன்றுதான் என்று இந்த உலகிற்கு தெரிவிற்கிறார்கள்.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667 

Mobirise