make your own website for free

Puncture பஞ்சர்

முக்கியமான வேளையில் வெளியே செல்லும் போது உங்கள் வாகனம் பஞ்சர் ஆகி நின்றால்
கோபம் வரலாம்,ஏன் இப்படி நடந்தது என்று தோன்றலாம்.

இது முழுவதும் நன்மைக்கே என்று உங்களுக்கு தெரியுமா? எப்படி என்று பார்ப்போம்

எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

Puncture பஞ்சர் என்றால் கிலிசல்,
சிறு துவாரம்,கூர்மையான பொருட்களால்
ஏற்பட்ட குத்து என்று அர்த்தம்

ராகு=முள்,ஆணி 📍📌
கேது=Tyre tube⭕

உங்கள் பிறப்பு ஜாதகத்தில் ராகு கேது அமர்ந்து உள்ள நட்சத்திர சாரத்திலும் அந்த நட்சத்திர தசா அதிபதியின் மற்ற நட்சத்திரத்திலும் அமர்ந்து உள்ளார்களோ
அந்த நாளில் நீங்கள் பயணம் மேற்கொண்டால் அந்த நாளில் உங்கள் வாகனம் பஞ்சர் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளது.

(உ.த) ராகு,கேது பூசம்,திருவோணம் என்று இருந்தால் இந்த நட்சத்திரத்தின் அதிபதியின்
மற்ற நட்சத்திரமான
அனுஷம்,உத்திரட்டாதி
ரோகினி,ஹஸ்தம், இப்படி ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் நடக்க வாய்ப்பு அதிகம் உண்டு

ராகு கேது இருவரும் நம் முன்னோர்களை குறிக்கும் கிரகம் நமக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து அதிலயிருந்து நம்மை பாதுகாக்க வேண்டியே
இது போன்ற சண்பவம் அதிகம் நடக்கலாம்.
இதற்கு நாம் அவர்களையும் குலதெய்வதையும் வணங்கி வரவேண்டும்.

முன்பெல்லாம் இதை வேறு விதமாக
சொல்வது உண்டு மும்பு நம் பயணம் மாட்டு வண்டியில் தான் அதிகம் இருக்கும் அந்த வேளையில் வண்டி சக்கர அச்சு முறிந்து விடுவது,சக்கரம் மண்ணில் இறக்கி விடுவது
போன்ற காரணங்கள் உண்டானால் பயண தடையாக கருதி பயணத்தை தவிர்ப்பார்கள்

இவைகள் ஏதார்த்தமாக நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு.

இன்றைய நவீன உலகில் பஞ்சர் ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும் இந்த சுச்சமத்தை புரிந்து கொள்ள வேண்டும்

நெடுதூர பயணத்தின் போது இப்படி பஞ்சர்
ஆனால் அல்லது வண்டி பழுதாகி நின்றாள் அந்த ஊர் எல்லை கோயிலில் வணங்கி வழிபட்டு செல்வது நல்லது.

இருந்தாலும் அடிக்கடி இதுபோல் சம்பவங்கள்
நடந்து வந்தால் அதற்கு மிக சிறந்த பரிகாரம்
கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் நன்மை கிடைக்கும்.

இந்த கோயிலின் வரலாறு
5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட இக்கோயிலின் பிள்ளையார் சிலை கோவை பேரூர் பட்டீசுவரர் கோயிலில் வைப்பதற்காக மதுரையிலிருந்தது வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இவ்விடத்தில் வண்டியின் அச்சு முறிந்து போனதாகவும், சிலையையும் அங்கிருந்து நகர்த்த முடியவில்லை என்பதாலும், அதே இடத்தில் அத்திருவுருவத்திற்கு கோயில் அமைக்கப்பட்டதாக, மரபு வரலாறு கூறுகிறது.

இதை நம்பிக்கை இல்லாதவர்கள் பின்பற்ற தேவையில்லை

குறிப்பு: பொது வாகனங்களுக்கு பொருந்தாது,மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவர்களுக்கும் பொருந்தாது.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise