best free html templates

சில நாட்களுக்கு முன்னால்

சில நாட்களுக்கு முன்னால் பயனற்ற சாவிகள் வீட்டில் வைக்க வேண்டாம் என்று ஒரு பதிவு செய்திருந்தேன் அதற்கு சிலர் விரிவான விளக்கம் கேட்டு இருந்தார்கள் அதற்கான பதிவு இது

பூட்டு தொலைத்துவிட்டு சாவி மட்டும் இருப்பதும் அல்லது சாவி தொலைந்து விட்டு பூட்டை மட்டும் வைப்பதும் ஒரு பிரிவு நிலையை உணர்த்தும் விஷயமாக மாறுகிறது இந்த நிலை தொடர்ந்து பயனற்ற சாவிகள் வீட்டில் இருக்கும் பொழுது வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் குழப்பங்கள் தான் மேலோங்கி இருக்கும் ஒரு இணை இல்லாமல் வீட்டில் எந்த விஷயம் இருந்தாலும் அது ஒரு பிரிவினையை குறிக்கும் விஷயமாக இருக்கும் அது தேவையற்ற பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் உருவாக்கும்.

அதேபோல் ஜோடி இல்லாத செருப்பு,
மூடி இல்லா பாத்திரங்கள், இவைகளை வைத்திருக்காதீர்கள் உபயோகமில்லாத எலக்ட்ரிக் சாதனங்கள்,பயன்படுத்திய மாத்திரை அட்டைகள், உடைந்த கண்ணாடி பொருட்கள்,பல்புகள் இவை எவையும் வீட்டில் வைத்திருக்காதீர்கள்.

இணையில்லாத பொருட்கள் எதை வைத்தாலும் அது புனர்பூசம் நட்சத்திரம் ஆக வேலை செய்யும், பிரிவினை ஏற்படுத்தும் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தின் காரணங்களை முடிந்தவரை செயற்கையாக உருவாக்காமல் இருப்பது நல்லது.

தொடர்புக்கு
நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise