bootstrap theme

நேற்று காஞ்சிபுரம் என்று ஒரு படம் 

நேற்று காஞ்சிபுரம் என்று ஒரு படம் பதிவு செய்து இருந்தேன் அதை பற்றி ஒரு ஜோதிட ரீதியாக விளக்கம் இப்போது.

எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

காஞ்சிபுரம் என்ற மாவட்டம் உலகியல் ஜோதிடத்தில் ரிஷப ராசியை குறிக்கும்
அதேபோல் சித்திரை நட்சத்திரமும் காஞ்சிபுரத்தை குறிக்கும்

சுமார் 5000 வருடம் பழமையான நகரம் இந்த காஞ்சிபுரம்,காஞ்சி என்ற மரவகை அதிகம் உள்ள பகுதி ஆனதால் இதற்கு காஞ்சிபுரம் என்ற பெயர் வந்தது என்று வரலாறு கூறுகிறது.

உலக புகழ்பெற்ற தாய் காமாட்சி இந்த மண்ணில் தான் ஆட்சி செய்கிறார்கள்

இந்த படத்தில் உள்ளதை போல் ரிஷபத்தில்
மிருகஷீரிடம், கன்னியில் சித்திரையும்,மகரத்தில் அவிட்டம் நட்சத்திரங்களும் தொடர்பு உள்ளது இந்த காஞ்சிபுரத்தில் எப்படி என்று பார்ப்போம்

உமிழ்நீர்=மிருகஷீரிடம்
பட்டுநூல்=சித்திரை
தறி,நூல்மீல்=அவிட்டம்

காஞ்சிபுரம் ஒரு கோவில் நகரமாக இருந்தாலும் இந்த நகரம் ஒரு பட்டு உற்பத்தி நகரம் ஆகும். மிருகஷீரிடம் நட்சத்திரம் "உமிழ்நீர்க்கு" காரகம்
பட்டுப்புழுவின் உமிழ்நீரில் இருந்து வருவது தான் இந்த பட்டுக்கூடு,இந்த கூட்டை நூலக
மாற்றினால் அது சித்திரை நட்சத்திரமாகும்
இந்த நூலை தறியில் நுர்த்தால் ஒரு நல்ல பட்டுப்புடவையாக மாறும்.
பட்டுப்புடவை என்றாலே அது காஞ்சிபுரம் பட்டு
தான்.

பட்டு என்றால் காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் என்றால் பட்டு.

இந்த உலக புகழ் பெற்ற இந்த
காஞ்சிபுரம் பட்டு உருவாக்க செவ்வாயில் மூன்று நட்சத்திரம் துணை வேண்டும்.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise