bootstrap html templates

கிளி,புதன்,  "சுகம்' என்றால் "கிளி'

கிளி,புதன்,

"சுகம்' என்றால் "கிளி'

கிளி என்றால் நமக்கு ஞாபகம் வருவது அதன் நிறம்,அழகு,குரல்,பேசும்
திறமை,பிறகு கிளி ஜோதிடம்

அது ஏன் கிளியை ஜோதிடத்தில் இணைத்தார்கள்?

ஜோதிடத்திற்கும் கிளிக்கும் மிக பெரிய சம்பந்தம் இருப்பதால்!

"கிளி" என்றால் புதன் ஆம் புதன் தான்

புதன் கிரகத்தில் நிறம் பச்சை(மரகதபச்சை) நிறம்,

ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருப்பவருக்கு நல்ல புத்தி,கேள்வி ஞானம்,கேட்டும் திறன் போன்ற திறமைகள் இயற்கையவே இருக்கும்

கிளிகளுக்கும் இயற்கையாக இந்த திறமைகள் இருக்கிறது

கிளிபிள்ளைக்கு சொல்லி கொடுப்பதை போல என்ற பேச்சு வழக்கம் உண்டு

சொன்னதை சொல்வான் கிளிப்பிள்ளை என்ற சொல்லும் வழக்கத்தில் உள்ளது

இன்று பல குடுபத்தில் ஒரு சிறு பிள்ளையாக
கிளிப்பிள்ளை இருக்கிறது

சூரிய குடும்பத்தில் இருப்பதிலேயே சிறு பிள்ளை (கிரகம்)புதன் தான்.

சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை (angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.30தான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.

உறவுக்கு காரகர் புதன்,பறவை இனத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வாழம் குணம் கிளிகளுக்கு உண்டு.

ஜாதகத்தில் புதனை வைத்து தான் அவர்கள் காதல் திருமணம் செய்வர் என்று முடிவு எடுப்பதும்
புதன் பகவானை வைத்து தான்

பறவை இனத்தில் காதல் பறவைகள் என்று சொன்னால்
நமக்கு முதலில் ஞானபாகம் வருவது கிளியை தான்

முருகர்,மதுரை மீனாட்சி அம்மன்,ஆண்டாள்,பெருமாள் போன்றவர்கலிடம் கையில் கிளியை பார்க்கலாம்.

புதனுக்கும் தூதுக்கும் சம்பந்தம் உண்டு.

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோலத்தில் கிளியும் இடம்பெற்றள்ளது.பக்தர்களின் கோரிக்கையை அம்பிகைக்கு நினைவூட்ட திரும்ப திரும்ப கிளி சொல்லிக் கொண்டிருப்பத நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாபவிமோசனத்திற்காக இத்தலத்தினை தேடி வந்தபோது கிளிகளே சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.

கிளிக்கும் தூதுக்கும் சம்பந்தம் உண்டு இதனால் தான்

கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும் விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள்.

பழநி முருகன் கையில் உள்ள தண்டத்தில் கிளி. இக்கிளியே அருணகிரிநாதர் என்பார்கள்.

பொதுவாக ஜாதகத்தில் புதன் திசை நடக்கும் போது பழனி சென்று முருகனையும்,மதுரை சென்று மீனாட்சியையும், திருப்பதி சென்று
வெங்கிடசலபதியையும் தரிசித்தால் அந்த திசை நல்ல பலனை தரும்

புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்தனர்.

புதன் பகவான் அதிபதி ஆவது ஆயில்யம் நட்சத்திரம் இந்த ஆயில்யம் நட்சத்திரம் வருவது கடகம் ராசியில் இந்த ராசியில் புதன் பகவான் பகை நிலையில்
ஆயில்யம் நட்சத்திரம் ஒரு பாம்பு நட்சத்திரம்
கிளிக்கும் பாம்பு பகை அல்லவா.

அதேபோல் கேட்டை நட்சத்திரத்திற்கும்
புதன் பகவான் அதிபதி கேட்டயில் பிறந்தவர் கோட்டையை ஆழ்வார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப கிளிகளும்
கோட்டையில்,உயர்ந்த மரங்களில்
கூடு அமைத்து வாழ்கிறது,கேட்டையில் பிறந்தவர்கள் கலகலப்பு பேச்சுக்கு சொந்தக்காரர்கள்
கிளிகளும் அப்படித்தானே. இந்த கேட்டை நட்சத்திரம் வருவது விருச்சிக ராசியில் இங்கு புதன் பகவான் சம பலன் தருவார்

புதன் பகவான் ரேவதி நட்சத்திரத்திற்கும் அதிபதி ஆவார்
இந்த நட்சத்திரத்தில் தான் "சுக்கிரன் உச்சம்"பெறுகிறார் சுக்கிரன் காம உணர்வு(உலக ஆசை) ஏற்படுத்தும் கிரகம் இந்த ரேவதி நட்சத்திரம் வருவது மீனம் ராசி இந்த ராசியில் புதன் "நீச்சம்"

"காம தேவனின் வாகனம் கிளி"

கிளி வகைகளில் லவ் போர்ட்ஸ்
(love birds)என்ற இனம் "ஒன்று இறந்தாலும் மற்றோன்றும் இறந்துவிடும்"

புதன் பகவான் ஆயில்யம்,கேட்டை
ரேவதி, நட்சத்திரங்களின் அதிபதி ஆவார்
இந்த நட்சத்திரங்கள் கடகம்,விருச்சிகம்,மீனம் ராசியில் உள்ளது இந்த ராசிகளில் கடகத்தில் பகையாகவும்,விருச்சிகத்தில் சமமாகவும்,மீனத்தில் நிச்சமாகவும் உள்ளார்,(1-5-9 திரிகோணம்)

இதன் மூலம் புதன் பகவான் நமக்கு உணர்த்தும் பாடம்

ஊர்ந்து வரும் பாம்பினை போல் இருக்கும் தீய பண்புகளுக்கு பகையாகவும்,

கோட்டை கட்டி வாழ்ந்தாலும் மனதை சமமாக வைத்தும்,

காமம்(உலக ஆசை) என்னும் ஆசையில் மனதை உச்சம் அடைய செய்தால்,இறை அன்பு என்ற எண்ணம் நிச்சம் அடையும் என்றும்

இதை தெரிந்து கொண்டு இந்த உலகம் என்ற கூட்டில் "மோட்சம்"என்ற சிறகு வளர்த்த பிறகு கிளியை போல் பறந்து செல்வோம் சுதந்திரமாக என்று புத்தி காரகன் "புதன் பகவான்" உணர்த்துகிறார்.

ஹரி ௐ குருப்பியோ நமஹ:
நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise