site design templates

யானையும்-"குரு" பகவானுக்கும் இருக்கும் சம்மந்தம் 

இன்றைய ஜோதிட பார்வையில்
யானையும்-"குரு" பகவானுக்கும் இருக்கும் சம்மந்தம் பற்றி

சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகம் "குரு பகவான்"

"அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்"என்பதை போல

இந்த உலகில் வாழும் பெரிய மிருகம் யானை யாகும்.

குரு' என்றால் 'கனமானது', 'பெரிசு' என்று அர்த்தம். அதாவது பெருமை உடையவர், மஹிமை பொருந்தியவர் என்று அர்த்தம்.
"கு" என்றால் இருட்டு
"ரு" என்றால் வெளிச்சம்
நம்மை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டுவருவர் இந்த "குரு"

விஞ்ஞானிகள் இவரை "Jupiter" என்று அழைக்கிறார்கள்.

ரோமானியர்கள் Jupiter ரை கடவுளாக வணங்குகிறார்கள்

யானைக்கு தமிழில் 60 வகையான பெயர்கள் உண்டு அதில் "கடகம்" என்ற பெயரும் உண்டு.

"கடகம்" என்றால் ஒரு பெரும் கூட்டத்தின் "தலைவன்"என்று அர்த்தம் என்பதை "தமிழ் மொழி" கூறுகிறது.
சுப கிராகளுக்கு எல்லாம் குருவாக( தலைவனாக) இருப்பரவர் "குரு பகவான்" என்று ஜோதிட சாஷ்திரம் உணர்த்துகிறது.

"குரு" பகவான் "உச்சம்"அடையும் ராசி "கடகம்"ராசியாகும்

குரு பகவான் புனர்பூசம்,விசாகம்,
புரட்டாதி நட்சத்திரங்களில் திசா அதிபதி ஆவார்.

குரு பகவான் வாகனம் "வெள்ளை யானை" ஆகும்.

ஜாதகத்தில் குரு 3,6,8,12ல் மறைவது
சகட யோகம் உண்டாகும்.

இதற்கு பரிகாரமாக யானை முடி மோதிரம் தங்கத்தில் அணிய வேண்டும் என்று சில பரிகரமுறைகள் உணர்த்துகிறது.

குரு-வாயு பகவான் அம்சமான
ஸ்ரீ குருவாயூர் அப்பன் திருக்கோவிலில் யானைக்கு மிக பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்க படுகிறதது.

வருடாவருடம் ஸ்ரீ குருவாயூர் அப்பன் திருக்கோவிலில் யானை ஓட்டம் நடத்தி முதலாவதாக வரும்
யானைக்கு தலைமை யானை பதவி கிடைக்கும்.

இப்படி பல வருடமாக முதல் இடம் பிடித்து உலக புகழ் பெற்ற யானை தான்
"ஸ்ரீ குருவாயூர் கேசவன்" இதன் நினைவாக இந்த யானைக்கு கோவில் அருகில் பெரிய சிலை இருக்கும்.

குருபகவான் அருள் பெற யானையை கோவில்களுக்கு தானம் செய்தால் சமூக அந்தஸ்து பெருகும் என்பது பெரும் நம்பிக்கை உள்ளது.

இந்த அடிப்படையில் தான் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் "ஜெயலலிதா" அவர்கள்
ஸ்ரீ குருவாயூர் அப்பன் கோவிலுக்கு யானையை காணிக்கையாக வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து தமிழக கோவில் யானைகளுக்கும் புத்துணர்வு முகாம்களை நடத்தினர்

குருவின் பார்வை நம் மீது பட யானைக்கு உணவு கொடுப்பது ஒருநல்ல பரிகாரம்.

வி யா ழன்
வி " என்றால் "இதற்கு மேல் இல்லை" எனப் பொருள

நவக்கிரகப் பிள்ளையார்

ஓங்கார நாயகனாய் திகழும் பிள்ளையாரின் உடலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரது நெற்றியில் சூரியனும், நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் பகவானும், வலது கீழ் கையில் புதனும் கொலு வீற்றிருக்கிறார்கள். வலது மேல் கையில் சனியும் , "சிரசில் குரு பகவானும்", இடது கீழ் கையில் சுக்கிரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இருக்கிறார்களாம்.

சிரசில் "குரு பகவான்" என்று வேதம் சொல்லுகிறது இந்த சிரசு
யானை முகம் இதில் இருந்தே தெரிகிறது யானை என்றாலே அது "குரு பகவான்" என்று

கஜகேசரி யோகம்!

மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம். பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம் கொடுக்கும்.

குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

வியாழன்(குரு)கோளில் பார்த்தால் ஒரு அதிசயம் தெரியும்
யானை கண் போன்ற அமைப்பு இருக்கும் (படம் இணைக்க பட்டுவுள்ளது)

குறிப்பு: Like விட கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

Mobirise