free web creation software

கால்கட்டு என்ற வார்த்தைக்கு ஜோதிட ஆன்மீக விளக்கம்

குருவே சரணம்

எனது ஆன்மீக ஜோதிட குருமார்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு இந்த பதிவை தொடர்கிறேன்

கால்கட்டு என்ற வார்த்தைக்கு ஜோதிட ஆன்மீக விளக்கம்

பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்து அவனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சொல்லப்பட்ட ஒரு வார்த்தையாக இருக்கிறது கால்கட்டு.

ஆனால் இந்த கால்கட்டு என்ற வார்த்தைக்கு ஜோதிடரீதியாக மிகப்பெரிய விளக்கம் இருக்கிறது

ஒருவருடைய ஜாதகத்தில் 7 ஆம் பாவம் திருமணத்தைக் குறிக்கும் பாவம் அதேபோல் 12ஆம் பாவம் விரயத்தை குறைக்கும் குறிக்கும் பாவம் ஒரு இளைஞன் தான் சம்பாதித்த பணத்தை எந்தவிதமான சேமிப்பும் இல்லாமல் சுகமாக விரயம் செய்து சுற்றிக்கொண்டிருக்கும் பாவம் 12ஆம் பாவம்

ஏழாம் பாவத்திற்குப் 12ஆம் பாவம் 6 ஆம் பாவம் ஆகும்

அதேபோல் 12ஆம் பாவத்திற்கு ஏழாம் பாவம் 8ஆம் பாவமாக வரும் இரு பாவமும் சம பலம் பொருந்திய பாவம்

பொதுவாக 6 ஆம் பாவத்தின் குணம் எல்லாவிதத்திலும் கட்டிப்போடும் பாவமாகும்

6 ஆம் பாவம் "கட்டு"
12 ஆம் பாவம் "கால்" (காலபுருஷ தத்துவத்தின்படி)

அப்படி திருமணமான பிறகு 12ஆம் பாவத்திற்கு 6ஆம் பாவமாக இருக்கும் 7ஆம் பாவம் கட்டிப்போடுகிறது, இதுதான் கால்கட்டு.

திருமணமான பிறகு மனைவிக்கு பயந்து அல்லது மனைவியின் மேல் இருக்கும் ஈர்ப்பின் காரணமாக திருமணமானவர்கள் எங்கும் சுற்றாமல் நேரடியாக வீட்டுக்கு வந்து விடுகிறார்கள்
குடும்ப வாழ்க்கைக்கு கட்டுப்பட்டு ஒரு கட்டுப் பாடோடு வாழ ஆரம்பிப்பார்.

இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.

கால்கட்டுயை பற்றி மற்றொரு விதத்திலும் விளக்கப்படுகிறது

தமிழில் கால் என்றால் காற்று என்றும் ஒரு பொருள் உண்டு
அதில் மூச்சு காற்றும் அடங்கும்
திருமணம் செய்து வைத்த பிறகு முறையாக ஆணும் பெண்ணும் இணையும் பொழுது அவர்கள் இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து கட்டும் இந்தக் கட்டும் ஒரு விதத்தில் கால்கட்டு தான் அந்த இணைப்பின் பரிசாக அவர்களுக்கு ஒரு குழந்தை செல்வமும் கிடைக்கிறது இந்த சொந்தத்தின் மூலமாக காலம் முழுவதும் இருவரும் பிரியாமல் ஒன்றாக வாழ்வார்கள் என்றும் நம் முன்னோர்கள் சூட்சுமமாக இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியாளர்
துலாம் சதீஷ்குமார்
+919894582567

Mobirise