website builder

உலக புகழ்பெற்ற மும்பை டப்பா வாலா என்று

குருவே சரணம்

உலக புகழ்பெற்ற மும்பை டப்பா வாலா என்று
அழைக்கப்படும் இவர்கள் எந்த கிரக சேர்க்கையில் வருவார்கள் என்று ஒரு ஜோதிட ரீதியான பார்வை

எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

சூரியன் + சந்திரன் + சனி சேர்க்கை

சூரியன்:-
கடமை தவரதவர் அதனால் தான் இவருக்கு சீலன் என்று ஒரு பெயர் உண்டு சீலம் என்றால் ஒரு மாதிரியான பழக்கம் என்று அர்த்தம்,"மும்பை"யை குறிக்கும் ராசி சிம்மம் இந்த சிம்மம் சூரியன் வீடு

சந்திரன்:-
உணவு, உணவு பொருட்கள், சமையல் பாத்திரங்கள், வெண்மையான உடைகள்,தியாகம்,சேவை,தேய்யும் பொருள்கள் அனைத்துக்கும் காரகர் இவர்

சனி:-
கடுமையாக உழைக்கும் மக்கள் அனைவருக்கும் காரகர் இவர்

சரி ஜோதிட பார்வைக்கு வருவோம் இந்த டப்பா வாலாக்கல் கடந்த 125 வருடங்களாக மும்பை நகரில் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து உணவுகள் எடுத்து செல்லும் பணி செய்து வருகிறார்கள் டப்பாவை குறித்த நேரத்தில் அதற்கு குறியவர்களிடம் கொண்டு சேர்த்தும் வருகிறார்
டப்பாவாலா தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் காலணி கூட அணியாத படி பணியாற்றுகிறார்கள்

இவர்கள் பணியில் இடைவேளை என்று ஒன்று கிடையாது மழை, வெயில்,புயல் என்று
பாராமல் தொடர்ந்து கடுமையாக பணியாற்றி வருகிறார்கள் இந்த நேரத்திலும் சரியான உணவுகளை அதற்கு குறியவர்களிடம் கொண்டு சேர்த்துவிடுகிறார்கள்.

இவர்கள் சந்திரனின் வெள்ளையை நிறத்தில் சீருடையாக அணிந்து வேலை செய்கிறார்கள்

கடந்த 125 வருடங்களாக இந்தியாவில் ஒரு
தொழில் தொடர்ந்து நடந்து வருவதை அறிந்து
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வந்திருந்த போது டப்பாவாலாக்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த இங்கிலாந்தை குறிக்கும் ராசி "மேஷம்" இந்த ராசியில் தான் "சூரியன்" உச்சம் அடைந்து ஒரு ராஜாவாக இருக்கிறார்,தங்களை வந்து கண்டு
கவுரவித்த நன்றிக்கு அவர் மகன்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மார்கலே திருமணத்திற்கு மும்பையில் உள்ள
மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் இன்று.

மொத்தத்தில் இவர்கள் சூரியனின் கடமை
தவறாமையும், சந்திரனை போல் வளர்ந்தும் தேய்ந்தும் சனியை போல் கடும் உழைப்பினையும் கொடுப்பதால் இந்த டப்பா வாலாக்கள் சூரியன்+சந்திரன்+சனி சேர்க்கை உடையவர்களே எவ்வளவோ உழைத்தும் இவர்கள் வாழ்க்கை இருட்டில் தான் என்பது வேதனை அளிக்கிறது.

நன்றி
தொடர்புக்கு
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667
Attachments area 

Mobirise