Mobirise

உங்களுக்கு சாபம் இருக்கிறது என்றால் அது எப்போது வேலை செய்யும்?

குரு வணக்கம்

இது ஜோதிட நம்பிக்கை சார்ந்த பதிவு

கேள்வி: உங்களுக்கு சாபம் இருக்கிறது என்றால் அது எப்போது வேலை செய்யும்?

பதில்:நீங்கள் ஒருவர்க்கு சாபம் விடும் போது.

அது எப்படி?

உதாரணம்:

நீங்கள் ஒருவருக்கு சிறிது பணத்தை கடனாக
கொடுத்து இருப்பிர்கள் ஆனால் உங்கள் பணத்தை சரியான நேரத்தில் திருப்பி கொடுத்து இருக்க மாட்டார், அல்லது அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்று
ஏமாற்றுவர் உடனே நமக்கு வரும் கோபத்தில் அவரை சாப்பிப்போம் அப்போது நமக்காக காத்துகொண்டு இருக்கும் இதுபோல் ஒரு சாபம் வேலை செய்யும்.

இது என்ன அநியாயமாக இருக்கு என்று சொல்கிறீர்களா.

நீங்க என்ன சொன்னாலும் இதுதாங்க உண்மை

நீங்கள் சாபம் உண்மை என்று நம்பி ஒருவரை
சாபிக்கும் போது உங்கள் சாபம் உங்களுக்கு வேலை செய்யும்

உங்கள் ஜாதகத்தில் 2க்கு உரியவர் 6,8,12 ல்
மறைத்தல் நீங்கள் யாருக்காவது பணம் கொடுத்தால் அது திரும்ப வராது,அது வராது என்று மட்டும் அல்ல அவரை நீங்கள் சாபிக்க வேண்டிய அவசியம் வரும்.

இது எதனால் உங்களுக்கு இப்படி ஒரு தும்பம் வருகிறது என்றால் அதற்கு உரிய காரணம் காரியம் இருக்கும் முன் ஜென்மங்களில் இதுபோல் ஒரு துன்பம் நீங்கள் யாருக்காவது கொடுத்து இருப்பிர்கள்.

அதனால் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு இப்படி இப்படி வேலை செய்யும்,

பலபேர் யாருக்காவது இப்படி சாபம் கொடுத்த பின்னல் மொத்தமாக எல்லாவற்றையும் இழந்துவிடுவார்கள்.

இதனால் தான் நம் முன்னோர்கள் யாரையும் சாபிக்காதிர்கள் என்று சொல்வார்கள்.

முடிந்த வரை கவனமாக இருங்கள்.⚠️



நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
⚖ துலாம் சதிஷ்குமார்
+919385763667

Mobirise